Story1

Title: முயல் மற்றும் ஆமை

Grade 0+ Lesson s3-l4

Explanation: Learn each individual topic of story in the given lessons in this section.

Characters Story: Part1 Part2 Part3 Part4 Moral

1.1 Picture: முயல் மற்றும் ஆமை -→ Hare and Tortoise

Test

Description:

Location: காடு

Forest

Characters: முயல் மற்றும் ஆமை

Hare and Tortoise

Items: மரங்கள், வீடுகள், ஏரி மற்றும் பாலம்

Trees, houses, lake, and a bridge

Action: ஆமையை கேலி செய்யும் முயல்

A hare making fun of the tortoise

Sentences:

முன்பு ஒரு காலத்தில், ஒரு முயலும் ஒரு ஆமையும் ஒரு கிராமத்திற்கு அருகில் வாழ்ந்தன.

அவை நல்ல நண்பர்களாக இருந்தன, ஆனால் முயல் தன் வேகத்தைப் பற்றி மிகவும் பெருமை கொண்டது.

அது அடிக்கடி ஆமையை மெதுவாக இருப்பதால் கேலி செய்தது.

Translation:

Munpu oru kaalaththil, oru muyalum oru aamaiyum oru kiraamaththirku arukil vaazhndhana.

Avai nalla nanbarkalaaga irundhana, aanaal muyal than vekaththaip patri migavum perumai kondadhu.

Adhu adikkadi aamaiyai medhuvaaga iruppathaal keli seidhadhu.

English:

Once upon a time, a hare and a tortoise lived near a village.

They were good friends, but the hare was very proud of his speed.

He often teased the tortoise for being slow.

1.2 Picture: சவால் -→ The Challenge

Test

Description:

Location: காடு

Forest

Characters: முயல் மற்றும் ஆமை

Hare and Tortoise

Items: மரங்கள், புதர்கள் மற்றும் கற்கள்

Trees, bushes, and stones

Action: முயலுக்கு சவால் விடும் ஆமை

A tortoise challenging the hare

Sentences:

ஆமை முயலின் கேலியால் சலித்துப் போனது.

ஒரு நாள், அது முயலையோட்டப் பந்தயத்திற்கு சவால் விட்டது.

முயல் சிரித்தது, ஆனால் விரைவாக பந்தயத்திற்கு ஒப்புக்கொண்டது.

Translation:

Aamai muyalin keliyaal salithu ponaadhu.

Oru naal, adhu muyalaiyoda pandhayaththirku savaal vittadhu.

Muyal sirithadhu, aanal viraivaga pandhayaththirku oppukkondadhu.

English:

The tortoise was tired of the hare’s teasing.

One day, he challenged the hare to a race.

The hare laughed but quickly agreed to the race.

1.3 Picture: பந்தயம் அமைக்கப்பட்டது -→ The Race is Set

Test

Description:

Location: காடு

Forest

Characters: காகம், யானை, ஆமை, தவளை, பூனை, முயல், குரங்கு, முதலியன

Crow, Elephant, Tortoise, Frog, Cat, Hare, Monkey, etc.

Items: ஒரு மரம், புல், கற்கள் மற்றும் காளான்கள்

A tree, grass, stones, and mushrooms

Action: விலங்குகள் பந்தயத்தைத் திட்டமிடுகின்றன

Animals planning race

Sentences:

பந்தயம் அடுத்த நாளுக்குத் திட்டமிடப்பட்டது.

பந்தயத்தைப் பார்க்க காட்டிலுள்ள எல்லா விலங்குகளும் கூடின.

காகம் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

Translation:

Pandhayam aduththa naalukkuth thittamitappattadhu.

Pandhayaththaip paarkka kaattilulla ellaa vilangugalum koodina.

Kaagam naduvaraagath therndhedukkappattadhu.

English:

The race was planned for the next day.

All the forest animals gathered to watch the race.

The crow was chosen to be the judge.

1.4 Picture: பந்தயத்தின் ஆரம்பம் -→ The Start of the Race

Test

Description:

Location: காடு

Forest

Characters: குரங்கு, நரி, தவளை, யானை, மான், ஆமை, முயல், எலி, காகம், முதலியன

Monkey, Fox, Frog, Elephant, Deer, Tortoise, Hare, Mouse, Crow, etc.

Items: மரங்கள், பாதை மற்றும் புல்

Trees, track, and grass

Action: தொடங்கவிருக்கும் பந்தயம்

A race about to start

Sentences:

முயலும் ஆமையும் தொடக்கக் கோட்டில் நின்றன

விலங்குகள் அவற்றை உற்சாகப்படுத்தி சத்தமாக ஆரவாரம் செய்தன.

"தயார், ஓடு!" என்று காக்கை கத்தியது.

Translation:

Muyalum Aamaiyum thodakkak kottil nindrana.

Vilangugal avatrai urchagappaduththi saththamaaga aaravaaram seithana.

"Thayaar, odu!" enru kaakkai kathiyadhu.

English:

The hare and the tortoise stood at the starting line.

The animals cheered loudly for them.

“On your mark, get set, go!” shouted the crow.

Characters Story: Part1 Part2 Part3 Part4 Moral

Copyright © 2020-2024 saibook.us Contact: info@saibook.org Version: 4.0 Built: 09-June-2025 12:00PM EST